தென் கொரியாவின் அனைத்து தொடர்புகளையும் வடகொரியா துண்டித்து கொள்ள முடிவு எடுத்துள்ளது.
வடகொரியா தென்கொரியாவிற்கு இடையிலான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளும் என வடகொரிய அரசு அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. ஹனோய் நகரில் கடந்த ஆண்டில் கிம் மற்றும் அமெரிக்க அதிபருக்கு இடையே நடந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிந்ததால் தென்கொரியா உடனான தொடர்பை துண்டித்ததுடன், அணுசக்தி பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது.
மேலும் கிம்மின் சகோதரி தென் கொரியாவுடன் கையெழுத்தான ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அச்சுறுத்தி வந்தார். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கிழக்கு மற்றும் மேற்கு கடல் தொடர்பு இணைப்புகள், சோதனை தொடர்பு பாதைகள், தொழில் கட்சியின் மத்திய குழு மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதிக்கும் இடையே உள்ள ஹாட்லைன் தொடர்பு போன்ற அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.