தமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் உயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக அரக்கோணம் to கோவை, திருச்சி to செங்கல்பட்டு to என 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு – திருச்சி ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் ரயில் நிலையங்களில் இருமார்கத்திலும் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அரக்கோணம் – கோவை ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு – திருச்சி ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் செங்கல்பட்டு இடையே வரும் 12ம் தேதி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகளும், 13 சாதாரண இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் 3 2ம் வகுப்பு பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.