Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதாவிட்டாலும் ஆல்பாஸ்: பள்ளிக்கல்வித்துறை!!

பத்தாம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதாவிட்டாலும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

மேலும், தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உயர்நீதிதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றிய முதல்வர் பழனிசாமி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்தால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். அதேசமயம் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், வருகை பதிவுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80% கணக்கிடப்படும் என்றும், வருகைப்பதிவின் அடிப்படையில் மாணவர்களுக்கு 20% மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏனெனில், 11ம் வகுப்பு செல்லும்போது என்ன குரூப் என்பதை தீர்மானிக்க வேண்டும் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட ஏதேனும் தொழிற்படிப்பிற்கு செல்லும்போது மாணவர் சேர்க்கையை தீர்மானிக்க வேண்டும் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கலந்து அரையாண்டு தேர்வுகளை எழுதவில்லை என்றாலும் மாணவர்கள் ஆல்பாஸ் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |