Categories
உலக செய்திகள்

குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து… குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டடம் ஓன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்,  இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 

கராச்சியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென  இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து மூத்த காவல் அலுவலர் அல்தாப் உசேன் கூறியதாவது , “கட்டட இடிந்து விழுந்தவுடன் எங்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம்.  இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

முதலில் ஒருவரது  சடலம் மட்டும் தென்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு சடலங்கள் தென்பட்டன. இடிந்து விழுந்த கட்டடத்தை ஆபத்தான பகுதி என்று மார்ச் மாதமே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் இந்த கட்டிடத்தில் குடியிருக்க வேண்டாம் எனவும் , வேறு இடத்துக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது கட்டட விபத்து நடந்துள்ளது. இந்தக் கட்டட விபத்தில் 7 ஆண்களும், 5 பெண்களும் 1 குழந்தையும் உயிர் இழந்துள்ளனர். கட்டட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருகிறது” என்றார்.

Categories

Tech |