திமுக கோரிக்கை வைக்க தமிழக அரசு அதனை நிறைவேற்ற மக்களுக்கும் நன்மையே நடந்து வருகின்றது
கொரோனா தொற்று பரவ தொடங்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை எப்போது மாறும் என்பதை அறியாத அரசு எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனையடுத்து பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அதனைப் பொருட்படுத்தாமல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதும் தேர்வை ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தேர்வை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்தும் பல வகையான எதிர்ப்புகள் பொதுத்தேர்வை முன்னிட்டு எழுந்தது. இதை ஏற்காமல் இருந்த தமிழக அரசு ஜூன் 15 தேர்வு என முடிவு செய்து மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டையும் வழங்கியது.
ஆனால் தற்போது தொற்று பரவலினால் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டபடி பொதுத் தேர்வை ரத்து செய்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத்தேர்வில் மட்டுமன்றி பல நிகழ்வுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்க அதையே தமிழக அரசு செய்து வருகின்றது. அவ்வகையில் மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் பட்டியலை வெளியிட முகஸ்டாலின் கேட்க தமிழக அரசு பட்டியலை வெளியிட்டது.
அடுத்ததாக கொரோனா பரிசோதனைக்காக ரேப்பிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதற்கான விலை பட்டியலை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக அரசு அதனையும் வெளியிட்டது. அதோடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதாகவும் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் திமுக குற்றம் சாட்ட அதற்கு சரியான விளக்கத்தை தமிழக அரசு கொடுத்தது.
இவ்வாறு எதிர்கட்சியான திமுக கேள்விகளை கேட்க அதற்கேற்றபடி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகின்றது. இதனால் திமுகவினர் டுவிட்டரில் #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலப்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் அனைத்தையும் கண்கூடாக பார்க்க முடிகின்றது. எனவே இரண்டு கட்சிகள் இருப்பதும் ஒருவிதத்தில் நல்லதாகவே தோன்றுகிறது.
Pic of the day…#MKSசொல்கிறார்EPSசெய்கிறார்#மாணவர்நலன்காக்கும்MKS pic.twitter.com/koXWYhSFse
— Rebindo (@Rebidmk) June 9, 2020
https://twitter.com/sabarivasandmk/status/1270358376573071362
Perfect🔥🔥🔥🔥🔥 #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் pic.twitter.com/ZLvLrV2jdj
— புத்தன் (@Buddhan_) June 9, 2020