மேஷ ராசி அன்பர்களே …! குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். மனதில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும்.
ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும்,திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக இன்று செயல்பட வாய்ப்பு இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திருமணத்திற்காக நீங்கள் முயற்சி செய்யுங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடைபெறும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.