மிதுன ராசி அன்பர்களே …! இன்று எந்த ஒரு பிரச்சனையும் திறம்பட நீங்கள் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை மட்டும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக இருந்தாலே போதுமானது. உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக தான் இன்று இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி நீங்கும். தேவையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். மன கசப்பு அவ்வப்போது வந்து செல்லலாம் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம் கவனம் இருக்கட்டும். செய்தொழிலில் லாபம் கூடும். தேவை இல்லாத விஷ்யத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் சரியான முறையில் பேச்சை எடுத்துச் செல்லுங்கள்.
வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமாக யாருக்கும் பணம் நான் பெற்றுத் தருவேன் என்று எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ளாமல் இருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்