கம்பம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதி அருகேயுள்ள வன சரகத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மின்சாரத்தை கடத்திச் செல்கின்றனர். இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால், அப்பகுதி வழியாக நடந்து செல்லும் யானைகள் அதன் மீது உரசி பரிதாபமாக உயிர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது சில ஆண்டுகளாகவே நடைபெற்று வர, யானைகளின் உயிரிழப்பை தடுப்பதற்காக சமூக ஆர்வலர்கள் சார்பில், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் யானைகளின் உயிரிழப்புகளை தடுப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை வனத்துறை, மின்சாரத்துறை விரைந்து எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கலந்துகொண்ட வனத்துறை அதிகாரிகளும் , மின்சாரத் துறை அதிகாரிகளும் இதுகுறித்து ஆலோசித்த போது மேற்கு வங்க மாநிலத்தின் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டு வரைபடம் வரையப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் செலவில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கான உயரமான மின் கோபுரங்கள் l அமைத்துவிட்டால்,
மின் கம்பிகளையும் உயர்வான நிலையில் செல்லும்படி அமைத்தால் யானைகள் உயிர் இழப்பு தடுக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டது திட்டமிட்டபடியே கிடைக்க , அவை செயல்படுத்தப்படவில்லை. இதனால் மீண்டும் யானைகள் உயிரழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் மனிதர்களால் யானை ஒன்றுக்கு வெடிமருந்து கொடுக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனவே இதனை அதிகாரிகள் கருத்தில்கொண்டு சரியான நடவடிக்கையை விரைவாக எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.