கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரை காட்டிலும் இந்தியாவின் மும்பையில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவின் வூஹான் நகரில் தான் ஆனால் அந்நகரில் 50,333 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,869 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் தொற்று தோன்றிய இடத்தை விட அது பரவும் இடத்தில் பாதிப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. அவ்வகையில் இந்தியாவின் ஹாட்ஸ்பாட் எனப்படும் மும்பையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஆனால் தொற்றை கையாளும் விதத்தில் இந்தியா சிறந்து விளங்குவதால் அந்நகரை விட மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக 760 எண்ணிக்கையில் உள்ளது. மகாராஷ்டிரா அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,259 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,787 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது தேசிய அளவிலான பாதிப்பில் கால் பங்காகும். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 42,638 தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். உலக நாடுகளுக்கு தொற்றை கொடுத்த சீனாவில் 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை சீனாவை தாண்டி 2,66,000 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து வருகின்றது.