தாய்லாந்து நாட்டில் 14 வயதான சிறுமி கர்ப்பமான நிலையில் கடவுள் தான் என்னை கர்ப்பமாக்கினார் என கூறியது அவரின் தாய் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுள்ளது.
தாய்லாந்தின் Buriram மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்பு மருத்துவமனையில் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. சிறுமியிடம் கேட்டதற்கு, தன்னை கடவுள் தான் கர்ப்பமாக்கினார் என கூற அவரின் தாய் மற்றும் மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.
தற்போது அந்த சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் கூறியது, சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரின் வளர்ப்பு தந்தை தான் காரணம் என் கூறினர் . மேலும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியின் 15 வயது சகோதரியையும் அவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார் என கூறினார்.
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த சிறுமியின் தாய், எனக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது, அவ்வாறு இது குறித்து எனக்கு முன்பே தெரிந்திருந்தால் “நானே என் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பேன் என கூறினார்.
இதையடுத்து காவல் துறையினர் வளர்ப்பு தந்தை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்; அப்போது அவர் கூறியது; நான் சிறுமியுடன் உறவு கொண்டது உண்மை தான், ஆனால் அதை நான் செய்யவில்லை அந்த சமயத்தில் கடவுள் என் உடலுக்குள் இறங்கி இப்படி செய்ய வைத்தார், என கூறினார் இது போலீசாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.