Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

செங்கல்பட்டில் இன்று மேலும் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,288 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று வரை செங்கல்பட்டில் 2,146 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தது. அதில் மொத்தம் 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் நேற்று வரை 1247 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1389 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலை நிமித்தமாக சென்னையில் இருந்து மக்கள் தினமும் வருகின்றனர்.

இதன் காரணமாவே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து 34,914 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் கொரோனவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |