Categories
தேசிய செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சோபியான் மாவட்டம் சூகோவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும்.

கடந்த ஜூன் 7ம் தேதி சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன்,ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர்.

அதில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற தாக்குதலில் நேற்று மொத்தம் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜூன் 8ம் தேதி காலை ஷோபியன் மாவட்டத்தின் பிஞ்சோரா பகுதியில் மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அப்போது போலீசாரும் பாதுகாப்பு படையினரும் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

Categories

Tech |