11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ம் வகுப்பில் ஒரு சில தேர்வுகளும் ஒத்திவைக்கபட்ட நிலையில் இந்த பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுவுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவிப்பை வெளியிட்டார். வரும் ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருந்த 10ம் வகுப்பு மற்றும் விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் 11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறப்பட்டுள்ளது அதாவது வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் படங்களில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், மீதமுள்ள பாடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று முடிவுகள் வெளியாகும் என தகவல் அளித்துள்ளனர்.