Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்” பிஞ்சு குழந்தைகள் தலையில் சுமை எதற்கு…?

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குழந்தை தொழிலாளர் அமைப்புடன் இணைந்து ஜூன் 12ம் தேதியை தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக 2002 ஆம் ஆண்டில் அறிவித்தது. குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயல்முறைகளை வளர்க்கவும் சர்வதேச குழந்தை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. எந்த ஒரு வடிவத்திலும் குழந்தைகளின் உழைப்பை எதிர்த்துப் போராட இது கவனத்தையும் ஈர்த்தது. இந்த அமைப்பின் தகவலின்படி உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணிபுரியும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இது போதுமான கல்வி, உடல்நலம், ஓய்வு மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் பெற்றுக் கொள்வதையும் தடுக்கிறது. இதனால் அவர்கள் உரிமை மீறப்படுகிறது. அபாயகரமான சூழலில் அடிமைத்தனம் அல்லது கட்டாய உழைப்பு மற்ற வடிவங்களில் போதை பொருட்களை பயன்படுத்துதல், விபச்சாரம் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதிலும் குழந்தைத் தொழிலாளர்களின் மோசமான வடிவங்கள் ஆகும். குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டவும், குழந்தைத் தொழிலாளர்களுக்கு உதவ வழிகாட்டுதல்களை வரையறுக்கவும் அரசாங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்புகளால்  இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Categories

Tech |