Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் அயனவரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டது.

மேலும் அவரது சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ள தகவல் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 33 வயதான அந்த மருத்துவருக்கு கடந்த 30ம் தேதி நோய்தொற்று உறுதியானது. தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 303 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |