தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என்றும் அதன் அருகில் தான் இருக்கிறோம் என்றும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் பாசி தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு மேற்கொண்ட கூட்டத்தில் பேசிய தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி கூறியதாவது, “கொரோனா தொற்று எனக்கு மிகவும் மோசமான கனவாக தோன்றுகிறது. நான்கு மாதத்திற்குள் உலகம் முழுவதையும் பெரும் அழிவிற்கு தள்ளியுள்ளது.
இன்னும் கொடிய கொரோனா தொற்று முடியவில்லை. உலக அளவில் மில்லியன் கணக்கில் தொற்று நோய்கள் இருக்கிறது. இது மிக குறுகிய காலகட்டத்தில் ஒடுக்கப்படும் நிலையில் கொரோனா தொற்று எந்த அளவிற்கு வேகமாக பரவியது என ஆச்சர்யமாக உள்ளது. எனினும் தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படும். அதன் அருகில் தான் இருக்கிறோம் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்