கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது திருமாநிலையூர் பகுதியில், ஒரு கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் விற்பதற்க்காக வைத்திருந்த 1 ¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.