Categories
உலக செய்திகள்

துணிலாம் செட் ஆகாது… மருத்துவ ரீதியா கடைபிடிங்க – உலக சுகாதார நிறுவனம்

மருத்துவ ரீதியான முகக் கவசங்கள் மட்டுமே கொரோனா தொற்றிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை வழக்கப்படுத்தி கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் அணிவது துணியால் ஆன முக கவசங்களே.  மருத்துவ ரீதியாக தயார் செய்யப்பட்ட முக கவசங்களை சிலர் மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் துணியால் ஆன முக கவசம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாது என கூறியுள்ளது.

வாகனங்களில் பயணம் செய்யும் போதும், சமூக இடைவெளி பின்பற்றும் இடங்களிலும் துணியால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் அணிவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றாத இடங்களுக்கு செல்லும் போது துணியால் ஆன முகக் கவசங்கள் அணிவதால் எந்த பலனும் இல்லை. அதிலும் நுரையீரல் நோய், புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்கள் நிச்சயம் மருத்துவ ரீதியான முக கவசம் மட்டுமே அணிய வேண்டும்.

பேப்ரிக்கால்  தயாரிக்கப்பட்ட முக கவசத்தினால் மட்டுமே வைரஸை தடுக்க முடியும். சாதாரண துணியில் செய்யப்பட்ட முக கவசத்தினால் கொரோனா தொற்றை தடுக்க முடியாது. அதேபோன்று நிச்சயம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ ரீதியான முக கவசத்தை மட்டுமே அணிய வேண்டும். அதோடு சமூக விலைகளை பின்பற்றுவதும், அவ்வப்போது கைகளை நன்றாக கழுவுவதும் நல்ல பலனைக் கொடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Categories

Tech |