ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது .
இந்நிலையில் நேற்று காலை பன்னிமடை பகுதின் மற்றொரு வீட்டின் முட்டுச்சந்தில், முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்டு , கைகள் கட்டப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது .
மேலும் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது . இதையடுத்து கொலையுடன் சேர்த்து போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் போலீசார் இது குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை பொள்ளாச்சி சம்பவத்தின் வடு மறைவதற்குள் அடுத்து ஒரு கொடுமை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.