இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் அவர் தனது தாய் இந்திராணியுடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக முனிராஜ் (விவசாயி) அவருடைய தாயார் மற்றும் தங்கையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இன்று காலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது, கோபமடைந்த முனிராஜ் தென்னை மட்டை, கம்பு, கற்களால் இந்திராணி மற்றும் சின்னம்மாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே சரிந்து விழுந்து சுயநினைவை இழந்தனர்.. பின்னர் அங்கிருந்து முனிராஜ் தப்பிச் சென்று விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் 108 ஆம்புலன்சு மற்றும் பரதராமி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாக சின்னம்மா பரிதாபமாக பலியானார்.. இந்திராணி ஆம்புலன்சு மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். சொத்து தகராறில் தாய் தங்கையை விவசாயி அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.