திமுக கட்சியை சேர்ந்த ஜெ.அன்பழகன் மரணமடைந்ததால் தமிழக சட்டமன்ற மன்றத்தில் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து திருவொற்றியூர் எம் எல் ஏ கே பி பி சாமி உயிரிழந்தார். இதனால் சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியான நிலையில், தற்போது ஜெ.அன்பழகன் உயிரிழந்ததை தொடர்ந்து சட்டமன்றத்தில் 3 இடங்கள் காலியாக உள்ளது .
இதனால் திமுக கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 98 இல் இருந்து 97 ஆக மாறியுள்ளது. தற்போது இருக்கும் நிலவரத்தின் அடிப்படையில் அதிமுக கட்சியில் 124 உறுப்பினர்களும், திமுக கட்சியில் 97 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்களும், சுயச்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நியமனம் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்து வருகின்றது.