ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக ஒருவர் தூக்கிலிட உள்ளார்
அமெரிக்க அதிபர் உத்தரவிற்கிணங்க பாக்தாத் விமான நிலையத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த ராணுவ தளபதி சுலைமான் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ தளபதி பற்றிய தகவலை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்ததாக முகமத் மௌசவி மஜீத் என்பவரிடம் ஈரான் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவரே சுலைமானின் பயணத் தகவல்களையும் பாதுகாப்பு தகவல்களையும் பகிர்ந்தது தெரியவந்துள்ளது. மொசாட் மற்றும் நுண்ணறிவு அமைப்புடன் மஜீத் தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக ஈரான் நாட்டின் நிதித்துறை செய்தித்தொடர்பாளர் கோலம்ஹோசின் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு மஜீத்தை தூக்கிலிட இருப்பதாக தெரிவித்துள்ளது.