ஈரோட்டில் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கிராமத்தில் சுபாஷ் என்ற நபர் கட்டிடம் ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணி செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவிக்கும், இவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில், காதலாக மாறியது. இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சிலர், மறைவான பகுதிகளுக்கு அந்த வாலிபர் பெண்ணை அழைத்து செல்வார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசை வார்த்தை கூறி ஒரேடியாக பெண்ணை கடத்திச் செல்ல, பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், காணாமல் போன பெண் மற்றும் சுபாஷ் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். இதையடுத்து குப்பாண்டபாளையத்தில் தனி வீடு ஒன்றை எடுத்து அங்கே மாணவியை தங்க வைத்து உள்ளதாக தகவல் தெரியவர,
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அங்கு சென்று இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டது தெரிய வர, அவரிடம் இருந்த மாணவியை மீட்டு, கடத்தி சென்ற சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.