Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு” திருமணத்தை தள்ளி போட்ட பெற்றோர்கள்….. விரக்தியடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!

தர்மபுரியில் பெற்றோர்கள் திருமணத்தை தள்ளி போட்டதால் காதல் ஜோடி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். அரூர் பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியில் சோபியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். இந்நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதை பரிமாறி காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களது பெற்றோரிடம் காதலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு  வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்காமல், கொரோனாவை  கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சிகளை தள்ளி வைப்போம்  ஊரடங்கிற்கு  பின் திருமணத்தை பற்றி பேசலாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து காதலர்கள் இரண்டு பேரும் சர்ச்சுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளனர். சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவர்களை தேடி அலைய தண்ட குப்பம் காப்புக்காடு வனப்பகுதியில் இரண்டுபேரும் இறந்து கிடந்ததை கண்டு பிடித்தனர்.

சிறுவர்கள் உடலை கண்டதும் உறவினர்கள் அவர்களை உடனே கட்டியணைத்தபடி கதறி அழுதனர். அவர்கள் சடலத்திற்கு அருகே விஷ பாட்டில் கிடந்துள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்  வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், திருமணத்தை தள்ளி வைத்தால் மன விரக்தி அடைந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஊர் மக்கள் மத்தியில் ஓரிரு மாதங்கள் கூட திருமணத்தைத் தள்ளிப் போட பொறுமையில்லாமல் காதல்ஜோடி இப்படி ஒரு முடிவை எடுத்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |