Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் எப்படி செலுத்துவது…? பிச்சை எடுக்க அனுமதி கேட்டு…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…!!

கோவையில் வாகன ஓட்டுனர்கள் பிச்சை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். அதில், அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு, அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணையை முழுமையாக அரசே ஏற்று கொள்ள வேண்டும் எனவும், 2021 ஆம் ஆண்டு வரையிலான வாகன காப்பீடு கட்டணங்களை வசூலிக்கக் கூடாது எனவும்,

சிறு தவறுகளுக்காக ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியை காவல்துறையினர் கைவிட வேண்டும் எனவும் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு மாதம் ரூபாய் 7,500 வீதம் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவசர காலங்களில் வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும், எலும்பு முறிவு ஏற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 5 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதேபோல் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றாவிட்டால் வாகன கடன்களை செலுத்த தற்போதைக்கு இயலாததால்  அதற்கான வருமானம் எங்களிடம் இல்லை எனவே உரிய முறையில் பிச்சை எடுக்க அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர். வாகனத்திற்கான கடன்களை செலுத்த வருமானம் இல்லாததால் பிச்சை எடுக்க அனுமதி அளிக்குமாறு வாகன ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |