மிதுன ராசி அன்பர்களே …! இன்று உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் ஓங்கி நிற்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். திருப்திகரமான வாழ்க்கையை உங்களுக்கு அமையும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாகக் கூட அமைந்துவிடலாம் ஆகையால் பொறுமையாக இருங்கள். உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இன்று எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை கொடுக்கும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் சிரப்பைக் கொடுக்கும். பணவரவு தடை நீங்கி கையில் வந்து சேரும். குழந்தைகள் பற்றிய கவலையும் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளும் சரியாகும். இன்று ஓரளவு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
மிகப் பெரிய தொகையைப் பயன்படுத்தி புதிய உதவிகள் மட்டும் ஏதும் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.