Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…கடன் தொல்லை நீங்கும்…ஒற்றுமை அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!         இன்று வீட்டுக்கு தேவையான நவீன ஆடம்பர சாதனங்களை வாங்கி மகிழும் வகையில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வ பக்தியால் நிம்மதி கூடும். மற்றவர்களின் செயல்களில் மட்டும் தலையிட வேண்டாம். அது உங்களுக்குப் பெரும் தலைவலியாக அமைந்துவிடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். தொழில் உள்ள போட்டிகள் நீங்கும். கூடுதலாக உழைக்க வேண்டி தான் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

புதியதாக காதலில் வழயபடக் கூடிய சூழலும் இருக்கும். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும்,சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் அணை த்து செயல்களும் சிறப்பாக அமையும்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும 5

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |