டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சேன் வாட்சன் 44 (26) அதிரடியாக விளையாடிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்களான களமிறங்கிய சேன் வாட்சன் சிறப்பாக விளையாடி 44 (26) ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் விளையாடிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Seithi_solai/status/1110764408240631808