Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி ஜவுளி கடையில் கொள்ளை…!!

ஜவுளிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி, துணிமணிகளை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் குரு என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல், வந்த 2 இளைஞர்கள் ரூ 20,000 மதிப்புள்ள துணிகளை எடுத்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஊழியரிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தசம்பவம் குறித்து தகவலறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் அப்பகுதியில் சுற்றி திரிந்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |