Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் அதிர்ச்சி… போலீஸ்காரரை கத்தியால் குத்திக்கொன்ற காவலாளி..!!

பூங்கா காவலாளி  போலீசார் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி என்பவரது மகன் புங்கலிங்கம். 34 வயதுடைய இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தூத்துக்குடி – பாளை சாலையிலுள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது புங்கலிங்கத்திற்கும், அந்த பூங்காவின் காவலாளியாகப் பணியாற்றி வரும் மறவன் மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் செல்வம் (44) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் கோபமடைந்த செல்வம், காவலர் புங்கலிங்கத்தை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டார். இதையடுத்து படுகாயமடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் புங்கலிங்கம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் துறை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குபதிந்து  காவலாளி செல்வத்தை கைதுசெய்தார். இறந்த புங்கலிங்கத்துக்கு காசியம்மாள் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. காவலர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |