வரும் செப்டம்பர் மாதம் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.செப்டம்பர் 24ம் தேதியில் சனி பகவான் சுய வீட்டிலும் ராகு சுக்கிரன் வீட்டிலும் கேது உங்களது ராசியில் அமர்ந்து விருச்சிக ராசிகாரர்களுக்கு மிக பெரிய யோகத்தை தர விற்கிறார்கள் என்றே கூறலாம்.
விருச்சகராசிகாரர் உங்களது வாழ்வில் கடந்த 18 வருடங்களாக படாதபாடுபட்டிருப்பீர்கள் கிட்டத்தட்ட உங்களது வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவித்து இருக்கமாட்டீர்கள் சதா பிரச்சனை கவலை என்றே காலம் போயிருக்கும்.
காலகட்டங்களில் குறிப்பாக ஐந்து வருடங்களாக எந்த நல்லதும் தடங்கலின்றி நடந்து இருக்காது ஒரு பிரச்சனை முடிந்தால் அடுத்த பிரச்சனை ரெடியாக லைன் கட்டி நின்று கொண்டிருக்கும்.
உங்கள் நியாயமான ஆசைகளைக் நிறைவேற்றிக் கொள்ளக்கூட நீங்கள் படாது பாடுபட்டிருப்பீர்கள் காலகட்டத்தில் என்னடா இது வாழ்க்கை என்ற விரக்தி எப்பொழுது ஏற்பட்டிருக்கிறதோ அப்பொழுதுதான் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்ணுக்கே தெரிந்திருக்கும் அதுவரை பிரச்சனைகள் பட்டா போட்டு உட்கார்ந்திருக்கும்.
காலகட்டங்களில் எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சனை என்றால் உங்களுக்கு வாழ்க்கையே பிரச்சனையாக இருந்திருக்கும் பெரும்பாலான காலகட்டங்களில் கடன்களை வாங்கியே காலம் கலித்இருப்பீர்கள்.
நகைகளை அடமானம் வைப்பது உங்களின் வாழ்வில் அடிக்கடி நிகழும் விஷயமாக இருந்திருக்கும் அதை மீட்க முடியாமல் பெரும்பாலும் நகைகள் மூழ்கிப் போயிருக்கும் இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்திருப்பீர்கள்.
காலகட்டங்களில் உங்களுக்கு உங்களைத் தவிர உங்களை சுற்றி இருக்கும் அத்தனை பேரும் பிரச்சனையாக தான் இருந்திருப்பார்கள் எவ்வளவு பிரச்சனை வாழ்வில் நடந்தாலும் அதை சமாளிக்கும் மன தைரியம் உங்களிடம் அதிகமாகவே காணப்பட்டிருக்கும்.
இதனால் வரை உங்களைச் சுற்றி உள்ளவர் அனைவருக்குமே நல்லது நடந்திருக்கும் ஆனால் உங்களுக்கு எந்த ஒரு நல்ல பலன் கிடைத்திருக்காது.
குறிப்பாக காலகட்டத்தில் உங்களிடம் இருக்கும் அனைவராலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருந்திருக்கும் உங்கள் வாழ்க்கையில்.
வாழ்க்கையில் விருச்சிகராசிக்காரர்கள் எதிர்பாராத துயரங்களை எல்லாம் சந்தித்திருப்பீர்கள் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எல்லா ராசிக்காரர்களும் தான் யோசனை செய்வார்கள்.
ஆனால் விருச்சகராசிகாரர்கள் இது தாரக மந்திரமாக கொண்டிருப்பீர்கள் அந்த அளவுக்கு நிறைய சோதனைகளை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள்.
திறமையும் கடின உழைப்பும் கொண்டவர்களாக இருந்தாலும் உங்களுக்கான அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பீர்கள் உங்களது வாழ்க்கையில் தேளின் கொடுக்கு போல கஷ்டங்கள் உங்களையும் தினமும் கொட்டி கொண்டு தான் இருந்திருக்கும் காலகட்டங்களில்.
ஆனால் வருகின்ற செப்டம்பர் மாதம் நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி கிரக நிலைகளின் அம்சங்கள் உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் அளவுக்கு உண்டு பண்ணபோகிறது இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சேர்க்க போகிறது.
வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்போருக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்க போகிறது நல்ல வருமானமும் காலகட்டத்தில் இருக்கும்.
வேலையில் இருப்போருக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும் உதவி கேட்ட இடத்தில் கட்டாயமாக கடன் தொகை கிடைக்கப்பெறுவீர்கள்.
உங்களது உறவினர்கள் உங்களது கஷ்டத்திற்கு தோல் கொடுக்கப் போகிறார்கள் வரும் காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்க நினைத்துக் கொண்டிருப்போர்கள் செப்டம்பருக்கு பிறகு புதிய தொழில் தொடங்கலாம் புதிய முதலீடுகளும் செய்யலாம் நல்ல லாபத்தை அடைய காண்பீர்கள்.
காலகட்டங்களில் கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதாக அமையப்போகிறது ராகு கேது பெயர்ச்சியின் பொழுது இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் நவக்கிரகங்களையும் வழிபட்டு வாருங்கள் இதனால் உங்களது வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனையும் நீங்கி சுபிட்சமான வாழ்வை வாழப் போகிறீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்களே செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நீங்கள் 18 வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரச்சனை இல்லாத வாழ்க்கை நிச்சயம் அமையப்போகிறது விரக்தியில் இருந்து மீண்டும் மன அழுத்தம் நீங்கி நிம்மதி பிறக்கும் நேரம் வரவிருக்கிறது மகிழ்ச்சியாக அதை வரவேற்க தயாராக இருங்கள்.