Categories
தேசிய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது.. உச்சநீதிமன்றம் கருத்து..!!

இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தரக்கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த இரு நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள முந்தைய நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும்.

அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, திமுக, பாமக சார்பில் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |