Categories
சினிமா தமிழ் சினிமா

அன்றே கணித்த சூர்யா… வலைத்தளத்தில் வைரலாகும் டிக் டிக் தகவல்..!!

கொரோனா ஊரடங்கால் தற்போது உலக மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களது தனிமையை போக்க சமூக வலைதளங்களே ஒரே வடிகாலாக உள்ளது.  இதனால் மீம் கிரியேட்டர்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் நெட்டிசன்களை கவர மிம் மீம் கிரியேட்டர்கள்  திரை பிரபலங்களை வைத்து பல மிம்களை உருவாக்கி உலவ விட்டு வருகின்றனர்.

நடிகர் சமுத்திரகனி தமிழ் கன்னட ரீமேக் படங்கள் என  பல விஷயங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்டுகளாகி சமூக வலைதளங்களை அலற விட்டன.. அந்தப் பட்டியலில் நடிகர் சூர்யாவும் தற்போது இணைந்திருக்கிறார்.

ஆப்பிரிக்கா பாலைவனங்களில் தொடங்கிய ராட்சச வெட்டு கிளிகளின் படையெடுப்பு தற்போது வட இந்தியா வரை நுழைந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை 2019 ஆம் ஆண்டில் வெளியான காப்பான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா முன்பே கணித்து சொல்லியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் மீம்களாக போடத் தொடங்கினர்.. அது காட்டுத்தீயாக இணையதளம் முழுவதும் பரவி வைரலானது.

இதை கவனித்த சில மீம் கிரியேட்டர்கள் காப்பான் படத்தைப்போலவே பல படங்களிலும் எதிர்காலத்தில் நடக்க இருந்ததை நடிகர் சூர்யா முன்பே கணித்துள்ளதாக ஒருபட்டியலையே வெளியிட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அனைவரையும் கதிகலங்க வைத்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இதை சூர்யா முன்பே கணித்து விட்டதாக மீம் கிரியேட்டர்கள்  குறிப்பிடுகின்றனர்.

2011ஆம் ஆண்டு வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் கதாபாத்திரத்தில் நடித்துவந்த சூர்யா சீன மக்களை தாக்கிய ஒருவித கொடிய வைரஸை குணப்படுத்துவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதைக் குறிப்பிட்டு கொரோனா தாக்குதலை அன்றே கணித்து விட்டதாக நெட்டிசன்களை வாயடைத்துப் போகச் செய்துள்ளனர்.

இதை அடுத்து அன்றே கணித்த சூர்யா என்ற பெயரில் ஏகப்பட்ட மீம்கள் சமூக வலைத்தளங்களில் டிராபிக் ஜாம் ஆகும் அளவிற்கு குவிந்தனர். 1999ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான பெரியண்ணா திரைப்படத்தில் நா “தம்மடிக்கிற ஸ்டைல பாத்து தனலட்சுமி விரும்பிச்சி என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில் கில்லி படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பதை தனலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷா பார்ப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதை இந்த பாடலோடு ஒப்பிட்டு மீம்கள் வெளியானது. இதை பார்த்துவிட்டு நெட்டிசன் பலர் எல்லை மீறிப் போவதாக கதற தொடங்கினர்.

தனிமனிதர் இடைவெளியை கடைப்பிடிப்பது, யானைகளை பாதுகாப்பது முக கவசம் அணிவது உள்ளிட்ட தற்கால நிகழ்வுகளை பல வருடங்களுக்கு முன்பு தனது படத்தில் கணித்து நடித்து இருந்ததாக பல மீம் கிரியேட்டர்கள் தங்கள் பங்குக்கு மீம்கள் வெளியிட தொடங்கியுள்ளனர்.

உண்மையில் நிஜத்தில் நடந்த பல சம்பவங்கள் திரைப்படங்களில் ஏற்கனவே கணிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக அன்பே சிவம் படத்தில் சுனாமி பேரழிவை முன்பே கமலஹாசன் சொல்லி இருப்பார். அதேபோல் தசாவதாரம் படத்தில்எபோலா வைரஸ் தாக்குதல் கணிக்கபட்டிருக்கும்.

இவை அனைத்தும் சீரியசாக பேசப்பட்டு வந்த சூழலில் தற்போது அன்றே கணித்தார் சூர்யாவும் சீரியசாக தொடங்கி தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளது. இனி சூர்யா நடிப்பில் வெளிவரும் படங்களில் வேறு எதையெல்லாம் அவர் கணிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

Categories

Tech |