ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் சட்டவிரோதமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் அதிகமான பணமானது கொண்டு செல்லப்படுகின்றது என்று அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளின் பெட்டியில் இரண்டு பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர் அப்போது அதில் கத்தை கத்தையாக வெளிநாட்டு பணங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 48 லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது . தேர்தல் காலத்தில் வெளிநாட்டு பணம் எடுத்து வரக்கூடாது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.