அமெரிக்க விமானப் படையின் தளபதியாக முதல்முறையாக ஆப்பிரிக்க-அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க விமானப் படையின் தளபதியாக ஆப்பிரிக்க-அமெரிக்கா சமூகத்தை சேர்ந்த ஜெனரல் சார்லஸ் பிரவுன் ஜூனியரை செனட் சபை ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளது. முதல்முறையாக ஆப்பிரிக்க-அமெரிக்கா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க விமானப்படை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மினியாபோலிஸ் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் நடந்து வரும் தொடர் போராட்டத்தினால் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில் சார்லஸ் விமானப்படை தளபதியாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று சார்லஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தார் அவர் எதிர்கொண்ட இன காழ்ப்புணர்ச்சி குறித்து தெரிவித்திருந்தார். அதில் “மற்றவர்கள் சீருடையை தான் அணிந்து இருந்தும் நீங்கள் விமான ஓட்டியா? என்று பலர் என்னிடம் கேள்வி கேட்டனர்” என தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் பாதுகாப்பு படைகள் 17% ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இருந்தாலும் விமானப்படையில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.