Categories
தேசிய செய்திகள்

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 49.2% … 2ம் நாளாக மீட்பு எண்ணிக்கை உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியா முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் இன்று 49.2% ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, 2ம் நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது என தெரிவித்தார். நாடு முழுவதும் கோரோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேரும், தமிழகத்தில் 36,841 பேரும், டெல்லியில் 32,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,102 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,41,029 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,37,448 ஆக உள்ளது. இந்த நிலையில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும். அதேபோல நேற்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206 ஆக இருந்தது. நேற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,33,632 ஆக உயர்ந்திருந்தது.

Categories

Tech |