சென்னையில் 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78, கோடம்பாக்கம் மண்டலத்தில் 73, திருவிக நகரில் 54 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதி அல்லது தெருக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானால் அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது, ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.