தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 11 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்றும் 1,800 ஐ தாண்டியது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் புதிதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 பேருக்கும், திருவள்ளூரில் 72 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும், வேலூரில் 12 பேருக்கும், திருவண்ணாமையில் 20 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வந்த 26 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், மேற்குவங்கத்தில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 6 பேர், அந்தமான் மற்றும் கேரளாவில் இருந்து வந்த தலா 2 பேர், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் 5, ஐக்கிய அரபு அமீகரத்தில் 3, சவூதி அரேபியா மற்றும் மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த தலா 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.