கடந்த 17 நாட்களில் புதிய கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாததால் தாய்லாந்து தங்களை கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கவுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது கோரதாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளின் அளவீட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் அத்தனையும் கடைபிடித்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான்.
பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அனைத்து நாட்டு அரசுகளும் வலியுறுத்தி வந்தன. இதனை கடைப்பிடித்த நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனா இல்லாத நாடாக தங்களை அறிவித்து வருகின்றனர். முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடமான சீனாவில் கொரோனா இல்லாமல் போனது. இதையடுத்து சமீபத்தில்கூட நியூஸிலாந்து கொரோனா இல்லாத நாடாக தங்களை அறிவித்துக் கொண்டது. இவர்களை தொடர்ந்து தற்போது தாய்லாந்தும் கொரோனா இல்லாத நாடாக மிக விரைவில் அறிவிக்க உள்ளது.
காரணம், கடந்த 17 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பு கூட அங்கு பதிவு செய்யப்படவில்லை. கொரோனா பாதிப்பு இல்லாமல் கொரோனா இல்லாத நாடாக அறிவித்தாலும் கூட, நோயின் தாக்கத்தை உணர்ந்து தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இதுவரை 3,125 பேர் மொத்தம் பாதிக்கப்பட அதில், 58 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.