ரெசிடென்சி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தங்களது தாயகத்திற்கு செல்ல அனுமதி அளித்து அமீரக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமீரக வாழ் வெளிநாட்டு குடும்பங்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப அடுத்த பகுதியில் திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் காலித் அப்துல்லா கூறினார்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து அமீரகம் திரும்ப விரும்பும் மக்கள் smartservices.ica.gov.ae என்னும் இணையதளத்தில் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும், மக்கள் தங்களது விண்ணப்பத்திற்கான அனுமதியை பெற்ற பின்பு தான் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது.
அமீரகத்திற்கு திரும்பும் அனைத்து மக்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் அது அவர்களது சொந்த செலவிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்து மையங்களில் அல்லது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் அமீரகம் திரும்ப மக்கள் அனைவரும் அரசின் கண்காணிப்பு அப்ளிகேஷனை தங்களது போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.