மிதுன ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய பேச்சு செயல் கொஞ்சம் மாறுபடலாம். நண்பரின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். உணவுப் பொருட்களை மட்டும் தரம் அறிந்து உண்ணுங்கள்.
ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். யாரிடமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பொறுமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாடு மேற்கொண்டால் செயல்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.