நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் 75,14,815 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,20,314 பேர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் திக்குமுக்காடி வருகிறது. அங்கு மட்டும் 20,66,401 பேர் பாதிக்கப்பட்டு 1,15,130 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருந்தாலும் குணமடைந்தவரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
உலகளவில் 38,10,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 32,29,837 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பெற்று வந்த 1,31,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 54,698 பெரும், அமெரிக்காவில் 19,632 பேரும், ரஷ்யாவில் 10,386 பேரும், இந்தியாவில் 6,714 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் வீடு திரும்பியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.