Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் இப்படி பண்ணலாமா…? ரூல்ஸ் மக்களுக்கு மட்டும் தானா..? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை…!!

நாகர்கோவில் அருகே காவல்துறை அதிகாரியே  விதிமுறை மீறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது  ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 5வது கட்ட நிலையில் தொடரும் இந்த ஊரடங்கில், பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

அதாவது திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, வீட்டில் வைத்து நடத்த வேண்டும் அப்படி நடத்தும் போதும் கூட 50 பேருக்கு மிகாமல் ஆட்களை வைத்து சமூக  இடைவெளியுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால் கன்னியாகுமரி, மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்புரம்  என்னும் கிராமத்தில் திருமண மண்டபம் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு திருமண விழா நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.

புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த மக்களை  வெளியேற்றி மண்டபத்திற்கு பூட்டு போட்டு பின் அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  பின் அங்கிருந்தவர்கள் அனைவரும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தனியார் விடுதிகளிலும் தனிமைப்படுத்தப் பட்டனர். பின் மேற்கொண்ட விசாரணையில் திருமணம் நடைபெற இருந்த மணமகன் சென்னையில்  சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்ததும்,

 திருமணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியதும் தெரியவந்துள்ளது. கொரோனாவின் வீரியம் அறிந்த காவல்துறை அதிகாரிகளே இது போன்ற செயலில் ஈடுபடுவது  தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகள் அனைத்தும் மக்களுக்கு தான், அதிகாரிகளுக்கு இல்லை என்று சமூக வலைதளங்களில் மணமகனான காவல்துறை அதிகாரிக்கு எதிராக கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

Categories

Tech |