Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் அடிச்சு கொடுத்தா…. நீங்க மாற்றனும்…. ரூ7,14,000 கள்ளநோட்டு பறிமுதல்…. 3பேர் கைது…!!

புதுக்கோட்டையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 புதுக்கோட்டையின் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வந்த மூன்று நபர்கள் 2000 கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி சென்றதால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி கணேஷ் நகர் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற  அதிகாரிகள் உடனடியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயராஜ் , வேலு,பழனியப்பன் ஆகிய 3 பேரும் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தது  தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜெயராஜ் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும், பழனியப்பன் மற்றும் வேலு ஆகியோர் கள்ளநோட்டுகளை  மாற்றுவது உள்ளிட்ட தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், ஜெயராஜ் என்பவர் ஏற்கனவே புதுச்சேரியிலிருந்து மதுபானத்தை குறைந்த விலையில் வாங்கி வந்து இங்கே உள்ள அரசு மதுக்கடைகளில் அதிக விலைக்கு விற்று சம்பாதித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும் தெரிய வர,

தற்போது கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில்  அவருடன் சேர்ந்து அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின் அவர்களிடம் மேற்கொண்ட விரிவான விசாரணையில், அவர்கள் ரூ50, ரூ 500, ரூ 2000 உள்ளிட்ட நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு இருப்பதும் அ மீதமுள்ள நோட்டுகளை  ஓரிடத்தில் மறைவாக பதித்து வைத்திருந்ததையும் கூறினர். இதையடுத்து அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று ரூபாய் 7 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்திய இயந்திரம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |