Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வரவை விட செலவு அதிகம்… பெரிய முதலீடு வேண்டாம்….!!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர் உறவினரை குறையும் சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றங்களை செய்வீர்.இன்று தெளிவான முடிவு எடுப்பது மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மதிப்பும், மரியாதையும் இன்று கூடும். அந்தஸ்து அதிகரிக்கும், பொருளாதாரம் சீராக இருக்கும்.

இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருந்தால் மிகவும் இனிமையாக இருக்கும். அதே போல இன்று புதிய முயற்சிகளை தயவுசெய்து தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. அதேபோல பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்த விதமான தொழிலையும் செய்ய வேண்டாம். இப்போதைக்கு பொறுமை காப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |