சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி வி. கே. சசிகலா, அவரின் உறவினர்கள் ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா மறைந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கான தண்டனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனுபவித்து வருகின்றனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது நிறைவடைய இருக்கும் நிலையில் சசிகலா எப்போது விடுதலை பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா விடுதலை செய்வது குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என்பதை சரியாக குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதில் கைதிக்கு விதிக்கப்பட்டு அபராதம் செலுத்தியதை பொருத்து விடுதலை தேதி மாறும் எனவும் சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.