கொரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்ய நாடு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.
உலகத்தையே கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா என அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மருந்து இல்லாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கண்டுபிடிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதற்கு பலனாக ரஷ்யா கொரோனா சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை அறிவித்துள்ளது.
அவிஃபாவிர் (Avifavir) என்ற மருந்து அங்கிருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் 50 சதவீத முதலீட்டை கொண்ட கெம்ரார் (ChemRar) என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து இருக்கின்றது. இந்த நிலையில் தான் தற்போது ரஷ்ய நாட்டின் சுகாதாரத்துறை இந்த மருந்தை அங்கீகாரம் செய்துள்ளது. மாதம்தோறும் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கொடுக்கும் வகையில் மருந்துக்கு உற்பத்தி செய்யப் பட்டுள்ளதாகவும், இதுவரை 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாடு முழுமைக்கும் இந்த மருந்துகள் தேவை அதிகரித்துள்ளதால் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மருந்தை டெலிவரி செய்வதற்கான ஆலோசனையில் அந்நாட்டு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த மருந்தின் பரிசோதனை ஆரம்பம் முடிவு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டு துறை தலைவர் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்