காதல் தோல்வி அடைந்ததால் விவாகரத்தான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் 33 வயதான இஷா தேசாய். இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவனை விவாகரத்து செய்து விட்டு தனது தாயுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இஷாவுக்கு நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இஷா அவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்.
இந்நிலையில், இஷாவும் அந்த இளைஞரும் செவ்வாய்க்கிழமை மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள், இதற்கிடையில் காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த, இஷா கோபத்துடன் நேராக தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் இஷா வெளியில் வராததால் பதறிபோன அவரின் தாயார் அருகில் வசிக்கும் தச்சனை அழைத்து கதவை திறந்து பார்த்தபோது இஷா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் செல்போனை வைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.