தனியார் மருத்துவமனையை கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் அதிரடி பதிலளித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது மத்திய அரசு நிர்ணயித்த கட்டணம். அதைவிட குறைத்து தான் நாம் நிர்ணயித்துள்ளோம். டாக்டர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு தான் நோய் பரிசோதனை செய்கிறார்கள். ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் பலருக்கு கொரோனா வந்துருக்கு. அப்படி வந்தா அவர 14 நாள்கள் தனிமையில் வைக்கணும். இதுயெல்லாம் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிக்கொண்டு இருக்காங்க. இதுல எவ்வளவு கட்டணம் ? அவ்வளவு கட்டணம் ? என்றால் யார் வந்து இந்த மருத்துவ சிகிச்சை செய்ய முடியும் ? நீங்கள் செய்ய முடியாது.
மருத்துவர்கள் தான் செய்ய முடியும். மருத்துவர்கள் முன்வந்து செய்ய வேண்டும் என்று சொன்னால் அந்த மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். சோதனை செய்ய இவ்வளவு வேண்டும் என்று அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு அறிவிச்சிருக்கு . மத்திய அரசு கட்டணம் நிர்ணயத்தை விட நாம் குறைந்து தான் கட்டணம் நிர்ணயம் பண்ணி இருக்கோம்.
சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனையை அரசு கையக படுத்தனும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு…. தனியார் மருத்துவமனையை எப்படி கையகப்படுத்துவீங்க. ஆறு மாசம் கையகப்படுத்தினால் டாக்டர் வரணும் இல்ல. எப்படி கையகப்படுத்த முடியும் ? இது ஜனநாயக நாடு, இது சர்வாதிகார நாடு கிடையாது. ஜனநாயக நாட்டில் எப்படி கேள்வி கேட்பதற்கு உரிமை இருக்கோ ? அது மாதிரி மருத்துவமனை நடத்துவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது, யாரும் தடுக்க முடியாது. சிகிச்சை செய்யச் சொல்லலாம், சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.