புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரை ஏற்கனவே தொற்றால் பாதித்தவர்களிடம் இருந்து குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. புதுச்சேரியில் முதன்முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 163ஆக உயர்ந்துள்ளது.
84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 76 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.